மருந்து கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை
மருந்து கடை உரிமையாளர் விஷம் குடித்து உயிரிழந்தார்
திருநெல்வேலி
களக்காடு:
களக்காடு அருகே உள்ள படலையார்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 35). இவரது மனைவி வைஷ்ணவி (28). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.
பாலசுப்பிரமணியன் களக்காட்டில் மருந்து கடை (மெடிக்கல்) நடத்தி வந்தார். இந்த கடை தொடங்கியதில் அவருக்கு ரூ.6 லட்சம் கடன் ஏற்பட்டதாகவும், கடனை அடைக்க தனது தந்தையிடம் உதவி கேட்டதாகவும், ஆனால் அவர் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுசம்பந்தமாக அவர்களுக்குள் தகராறும் ஏற்பட்டுள்ளது.
இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த பாலசுப்பிரமணியன் வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். உறவினர்கள் அவரை மீட்டு, நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி பாலசுப்பிரமணியன் உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் களக்காடு போலீசார் வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story