பிரையண்ட் பூங்காவில் 2-ம் கட்ட மலர் செடிகள் நடும் பணி தொடக்கம்
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 2-ம் கட்ட மலர் செடிகள் நடும் பணி தொடங்கியது.
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதத்தில் குளுகுளு சீசன் ெதாடங்கும். இதையொட்டி ேகாடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறும். இந்த ஆண்டு குளுகுளு சீசனை முன்னிட்டு பிரையண்ட் பூங்காவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல் கட்ட மலர் செடிகள் நடும் பணி நடந்தது. தற்போது 2-ம் கட்ட மலர் செடிகள் நடும் பணி நேற்று காலை தொடங்கியது.
இதற்காக கொல்கத்தாவில் இருந்து வெள்ளை, இளஞ்சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், நீலம் உள்ளிட்ட 20 நிறங்களில் 5 ஆயிரம் டேலியா மலர் செடி நாற்றுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த டேலியா மலர் செடிகளை நடவு செய்யும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மலர் செடிகள் நாற்று நடும் பணி 3 நாட்கள் நடைபெறும். குளுகுளு சீசன் தொடங்கும்போது சுற்றுலா பயணிகள் வரவேற்கும் விதமாக டேலியா மலர் செடிகள் பல நிறங்களில் மலர்ந்து காணப்படும் என்று பூங்கா மேலாளர் சிவபாலன் தெரிவித்தார்.