போட்டோ ஸ்டூடியோ உரிமையாளரிடம் ரூ.6 லட்சம் கொள்ளை


போட்டோ ஸ்டூடியோ உரிமையாளரிடம் ரூ.6 லட்சம் கொள்ளை
x

போச்சம்பள்ளி அருகே பட்டப்பகலில் போட்டோ ஸ்டூடியோ உரிமையாளிடம் ரூ.6 லட்சம் கொள்ளை போனது. கண்களில் மிளகாய் பொடி தூவி கும்பல் கைவரிசை காட்டி உள்ளது.

கிருஷ்ணகிரி

மத்தூர்

போட்டோ ஸ்டூடியோ

போச்சம்பள்ளி அருகே வலசை கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 34). இவர் போச்சம்பள்ளி பகுதியில் சொந்தமாக போட்டோ ஸ்டூடியோ ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் போச்சம்பள்ளியில் உள்ள வங்கி ஒன்றில் அடகு வைத்துள்ள தனது நகைகளை மீட்பதற்காக காலை 10.30 மணி அளவில் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் போச்சம்பள்ளியை நோக்கி வந்ததாக தெரிகிறது.

புளியம்பட்டி அருகே வரும்பொழுது எதிரில் டிப்-டாப்பாக ஒரு ஆணும், பெண்ணும் மொபட் ஒன்றில் வந்துள்ளனர். அருகே வரும்போது திடீரென மொபட்டை ஓட்டி வந்த ஆணின் பின்பு அமர்ந்து கொண்டிருந்த பெண் மிளகாய் பொடியை கோபாலகிருஷ்ணன் கண்களில் தூவியுள்ளார்.

ரூ.6 லட்சம் பறிப்பு

இதனால் நிலை தடுமாறிய கோபாலகிருஷ்ணன் சுதாரிப்பதற்குள் சாலையோர புதரின் மறைவில் இருந்து மேலும் இரண்டு பேர் வந்து அவரை வண்டியுடன் கீழே தள்ளி. அவரிடம் இருந்து பணப்பையை பறித்துச் சென்றதாக தெரிகிறது. அதில் ரூ.6 லட்சம் இருந்தததாக தெரிகிறது.

அந்த வழியாக வந்தவர்கள் கோபாலகிருஷ்ணனுக்கு தண்ணீர் கொடுத்து கண்களை கழுவ சொன்னார்கள். அதன்பிறகு கோபாலகிருஷ்ணன் நடந்த சம்பவத்தை போச்சம்பள்ளி போலீசில் புகாராக கொடுத்தார். அதன்பேரில் போலீசார் 30-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்துக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் வந்து விசாரணை நடத்தினார். பட்டப்பகலில் மிளகாய் பொடியை தூவி கும்பலாக நடத்திய இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story