தூக்குப்போட்டு போட்டோகிராபர் தற்கொலை


தூக்குப்போட்டு போட்டோகிராபர் தற்கொலை
x

தூக்குப்போட்டு போட்டோகிராபர் தற்கொலை செய்து கொண்டார்

தஞ்சாவூர்

திருச்சி வடக்கு ஆண்டாள் வீதி முதலியார் சந்து பகுதியைச் சேர்ந்தவர் முத்தமிழ்செல்வன் (வயது 53). போட்டோகிராபர். உடல்நலம் பாதிக்கப்பட்ட இவருக்கு சரிவர வேலை கிடைக்காததால் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் இருந்து வெளியேறிய அவர் திருக்காட்டுப்பள்ளி தோகூர் அருகே உள்ள வெண்ணாற்றங்கரையில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின்பேரில் தோகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்(பயிற்சி) மகாலட்சுமி, முத்தமிழ்செல்வன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story