மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்
x

பட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை;

பட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் தமிழக அரசின் தேசிய அடையாள அட்டை 54 பேருக்கு வழங்கப்பட்டது. மத்திய அரசின் தனித்துவ அடையாள அட்டை 39 பேருக்கு வழங்கப்பட்டது. மனநல டாக்டர் உஷா நந்தினி, காது, மூக்கு, தொண்டை டாக்டர் சரவணன், எலும்பு முறிவு டாக்டர் கலைச்செல்வன், கண் டாக்டர் காமேஸ்வரி ஆகியோர் மருத்துவ பரிசோதனை செய்து மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டையை வழங்கினர். முகாமில் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கம் டிசம்பர் 3 இயக்கத்தின் சார்பாக மாவட்ட பொருளாளர் சுதாகர், மாவட்ட துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மகளிர் அணி மாவட்ட தலைவி ரேவதி, காது கேளாதோர் அணி மாவட்ட தலைவர் பாண்டித்துரை, பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர் ஜம்ஜம் அஷ்ரப், ஒன்றிய துணைத் தலைவர் நல்லதம்பி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story