மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்
மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் இன்று நடக்கிறது
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது. கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவையை மனுக்களாக அளித்துபயன்பெறலாம். மேலும் இதுநாள் வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் தங்களின் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாளஅட்டை அனைத்து பக்கங்களின் நகல், மருத்துவசான்றுநகல், ஆதார் அட்டைநகல், குடும்பஅட்டைநகல், வாக்காளர் அட்டைநகல், முதல்-அமைச்சரின் மருத்துவகாப்பீட்டு அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் அளவிலான தற்போதைய போட்டோ-1, கைப்பேசிஎண் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த தகவலை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story