பலமணி நேரம் மின்தடை; கிராம மக்கள் மறியல்


பலமணி நேரம் மின்தடை; கிராம மக்கள் மறியல்
x

பல மணி நேரம் மின்தடையை கண்டித்து மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்குட்பட்ட மேலமட்டையான் கிராமத்தில் நேற்று மதியத்திலிருந்து மின்சாரம் தடைபட்டது. இதனால் கிராமமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இரவு வெகு நேரமாகியும் மின்சாரம் வராதால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று இரவு 10 மணியளவில் மேலக்கால் விக்கிரமங்கலம் மெயின் ரோடு மலைப்பட்டி கிராமத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. இதுகுறித்து அறிந்த தென்கரை ஊராட்சி தலைவர் மஞ்சுளா ஐயப்பன், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன், காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் குபேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story