ராஜராஜசோழன் சிலையிடம் மனு கொடுக்க அனுமதி மறுத்ததால் மறியல்


ராஜராஜசோழன் சிலையிடம் மனு கொடுக்க அனுமதி மறுத்ததால் மறியல்
x

ராஜராஜசோழன் சிலையிடம் மனு கொடுக்க அனுமதி மறுத்ததால் மறியல்

தஞ்சாவூர்

குடியரசு தினத்தையொட்டி கச்சத்தீவில் தேசிய கொடியேற்றுவதாக காவிபுலிப்படை கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்காக தஞ்சையில் உள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு சிலையிடம் மனு கொடுத்து விட்டு ராமேஸ்வரம் புறப்படுவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி காவிரி புலிப்படை கட்சி தலைவர் புலவஞ்சிபோஸ் தலைமையில் நிர்வாகிகள் பிரபாகரன், தினேஷ், ஆனந்த், பிரபா, முருகன் ஆகியோர் முன்னிலையில் அக்கட்சியினர் தேசியக்கொடியுடன் நேற்று தஞ்சை பெரிய கோவில் அருகே உள்ள ராஜராஜசோழன் சிலைக்கு வந்தனர். ஆனால் சிலையிடம் மனு கொடுக்க போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து மாலை அணிவிக்க மட்டும் அனுமதி அளித்தனர். அதன்படி மாலை அணிவித்து விட்டு வெளியே வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட புலவஞ்சி போஸ் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story