இறந்தவர் உடலை சாலையில் வைத்து மறியல்


இறந்தவர் உடலை சாலையில் வைத்து மறியல்
x

இறந்தவர் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டம் நடந்தது.

திருச்சி

துறையூர்:

திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த வெள்ளக்கல்பட்டி ஊராட்சியில் வசித்து வந்த தங்கையன் என்பவர் உயிரிழந்ததையடுத்து, அவரது உடல் ஊர்வலமாக மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது அந்த ஊர்வலத்தை, அதே ஊராட்சியில் உள்ள இரு தரப்பினர் தடுத்து, தங்களது குடியிருப்பு பகுதி வழியாக இறந்தவர் உடலை மயானத்திற்கு கொண்டு செல்லக்கூடாது என்று தடுத்தனர்.

இதனால் தங்கையன் உடலை ஊர்வலமாக கொண்டு வந்த தரப்பினர், அவரது உடலை சாலையின் குறுக்கே வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்த புலிவலம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூன்று தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டனர். மேலும் வழக்கமான பாதையில் தங்கையனின் உடல் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.


Next Story