மாங்கனி பறித்தல் நிகழ்ச்சி


மாங்கனி பறித்தல் நிகழ்ச்சி
x

சிவகிரி திரவுபதியம்மன் கோவில் விழாவில் மாங்கனி பறித்தல் நிகழ்ச்சி நடந்தது.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி திரவுபதியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 4-ம் நாள் விழா இல்லத்து பிள்ளைமார் சமுதாயத்தின் சார்பில் நடந்தது. அன்று மாங்கனி பறித்தல் நிகழ்ச்சி, கீழ ரத வீதியும் தெற்கு ரத வீதியும் சந்திக்கும் பகுதியில் கீரைக்கடை சந்திப்பில் நடந்தது. இதில் மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள மாங்கனி பறித்தல் சம்பவத்தை பக்தர்கள் தத்ரூபமாக நடித்து காட்டினர். பின்னர் பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு மஞ்சள் காப்பு வழங்கப்பட்டது.


Next Story