கருணாநிதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படங்கள்


கருணாநிதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படங்கள்
x

கருணாநிதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படங்கள் திறக்கப்பட்டன.

விருதுநகர்

ராஜபாளையம்

ராஜபாளையம் நகர்மன்ற சாதாரண கூட்டம் தலைவர் பவித்ரா ஷியாம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆணையாளர் பார்த்தசாரதி, துணைத்தலைவர் கல்பனா குழந்தைவேலு மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதில் 68 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் நகர்மன்ற கூட்ட அரங்கில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆகியோரின் படங்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். அப்போது தனுஷ்குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதேபோல ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு புதிய கட்டிடம் கட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி, அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.



Next Story