பிடாரியம்மன் கோவில் கதவை உடைத்து 2 பவுன் தாலி சங்கிலி திருட்டு
பிடாரியம்மன் கோவில் கதவை உடைத்து 2 பவுன் தாலி சங்கிலி திருட்டு போனது.
கந்தர்வகோட்டை அருகே, ராசாபட்டியில் பிடாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அதே ஊரை சேர்ந்த முத்துக்குமார் (வயது 45) என்பவர் பூசாரியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு முத்துக்குமார் கோவிலில் பூஜைகளை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை அவர் கோவிலில் பூஜை செய்வதற்காக வந்தார். அப்போது கோவில் கருவறையின் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்த போது, அம்மன் கழுத்தில் கிடந்த 17 கிராம் கொண்ட தங்க தாலி சங்கிலியை மர்மநபர்கள் திருடி சென்றது ெதரியவந்தது. மேலும் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும் மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் முத்துக்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் கதவை உடைத்து அம்மன் தாலி சங்கிலி, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி ேதடி வருகின்றனர்.