கொள்ளிடத்தில், போலீஸ் பாதுகாப்புடன் பன்றி பிடிக்கும் பணி


கொள்ளிடத்தில், போலீஸ் பாதுகாப்புடன் பன்றி பிடிக்கும் பணி
x
தினத்தந்தி 9 Nov 2022 12:15 AM IST (Updated: 9 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வளர்ப்பவர்கள் எதிர்ப்பு எதிரொலி: கொள்ளிடத்தில், போலீஸ் பாதுகாப்புடன் பன்றி பிடிக்கும் பணி

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனை சாவடி அருகே ரெயில்வே பாலத்தை ஒட்டி ஆற்றின் கரையோரம் கழிவுகள் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. அங்கு பன்றி நடமாட்டும் அதிகமாக காணப்படுகிறது. இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு 50-க்கும் மேற்பட்ட பன்றிகள் பிடித்து அப்புறப்படுத்தப்பட்டன. இதற்கு பன்றி வளர்ப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பிடிக்கப்பட்ட பன்றிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை என அவர்கள் வேதனை தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் ஊராட்சி சார்பில் பன்றிகளை பிடிப்பதற்கு 20 பேரை கொண்ட குழுவினர் அங்கு வந்தனர். பன்றி வளர்ப்பவர்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் கொள்ளிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் பன்றி பிடிக்கும் பணி நடந்தது. இதில் பிடிபட்ட பன்றிகள் மினி லாரி மூலம் விழுப்புரம் கொண்டு செல்லப்பட்டது.


Next Story