பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த பன்றிகள் பிடிக்கப்பட்டன
பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த பன்றிகள் பிடிக்கப்பட்டன
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சிக்கு உட்பட்ட வாழ்மங்கலம் மெயின்ரோடு, மாதாகோவில் தெரு, திரவுபதி அம்மன் கோவில் தெரு, புதுப்பட்டினம், மடத்தெரு, தோப்புத் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையிலும் ஏராளமான பன்றிகள் சுற்றித் திரிந்தன. இந்த பன்றிகளை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அந்த பகுதியில் தனியார் பன்றி பிடிப்போர் ஒருங்கிணைந்து 20-க்கும் மேற்பட்ட பன்றிகளை உயிரோடு பிடித்து லாரியில் ஏற்றினர். இந்த பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி பக்கிரிசாமி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், திட்டச்சேரி சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் டென்னிசன், நற்குணம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெயபால் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story