மகாதீபம் தரிசிக்க மலை ஏறியபோது பக்தர்களால் வீசப்பட்டு குவிந்த பிளாஸ்டிக் பாட்டில்கள்


மகாதீபம் தரிசிக்க மலை ஏறியபோது பக்தர்களால் வீசப்பட்டு குவிந்த பிளாஸ்டிக் பாட்டில்கள்
x

மகாதீபம் தரிசிக்க மலை ஏறியபோது பக்தர்களால் வீசப்பட்டு குவிந்த பிளாஸ்டிக் பாட்டில்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

மகாதீபம் தரிசிக்க மலை ஏறியபோது பக்தர்களால் வீசப்பட்டு குவிந்த பிளாஸ்டிக் பாட்டில்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மலையில் நேற்று முன்தினம் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மலை ஏற பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பில் 2,500 பேருக்கு மட்டும் இலவச அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பல்வேறு வழித்தடங்களில் இருந்து அனுமதி பெறாத பலரும் மகாதீபத்தை காண மலை ஏறி வந்தனர்.

அவ்வாறு மலை ஏறிய பக்தர்கள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களை மலைக்கு செல்லம் பாதையிலேயே வீசி சென்றுள்ளனர். சுமார் நூற்றுக்கணக்கான பிளாஸ்டிக் பாடில்கள் மலை மீது விசப்பட்டு கிடந்ததை பார்க்க முடிந்தது.

எனவே மலை மீது கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இனிவரும் காலங்களில் மலை ஏறும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதோடு, பிளாஸ்டிக் பொருட்கள், கேன்களை மலை மீது அனுமதிக்க கூடாது. குறிப்பாக ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல தடைவிக்க வேண்டும். சிவனே மலை வடிவாக காட்வசியளிக்கும் புனிதமான மலையை மாசுபடுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story