சந்தனமாரியம்மன் கோவில் கொடைவிழாவில் பக்தர்கள் பால்குட ஊர்வலம்
உடன்குடி பிள்ளையார் பெரியவன்தட்டு சந்தனமாரியம்மன் கோவில் கொடைவிழாவில் பக்தர்களின் பால்குட ஊர்வலம் நடந்தது.
தூத்துக்குடி
உடன்குடி:
உடன்குடி பிள்ளையார் பெரியவன்தட்டு சந்தனமாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள், தீபாராதனை, திருவிளக்குபூஜை ஆகியன நடைபெற்றது. நேற்று உடன்குடி கண்டுகொண்ட விநாயகர் ேகாவிலில் இருந்து மேளதாளங்களுடன் பால்குட ஊர்வலம் தொடங்கி, பஜார் வழியாக கோவிலை சென்றடைந்தது. அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. நள்ளிரவில் சிறப்பு ஆலங்கார பூஜைகள், தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது இன்று(புதன்கிழமை) மதியம் 1 மணிக்கு சிறப்பு பூஜை, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுடன் கொடை விழா நிறைவு பெறுகிறது.
Related Tags :
Next Story