மேலக்கரந்தையில் முன்னோடி மனுநீதி நாள் முகாம்


மேலக்கரந்தையில் முன்னோடி மனுநீதி நாள் முகாம்
x

மேலக்கரந்தையில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் நடந்தது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தையில் தூத்துக்குடி மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ஜேன்கிறிஸ்டிபாய் தலைமையில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் நேற்று நடந்தது. முத்துலாபுரம் பிர்காவை சேர்ந்த கிராம மக்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவி தொகை மற்றும் பொதுவான அடிப்படை தேவைகள் குறித்து மனு அளித்தனர். நேற்று நடந்த முகாமில் 119 மனுக்கள் பெறப்பட்டது. எட்டயபுரம் தாசில்தார் கிருஷ்ணகுமாரி, சமூக நல பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரகுபதி, வருவாய் ஆய்வாளர் சாந்தா, கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story