பைபர் மீன்பிடி படகு, வலைகள் தீயில் கருகி சேதம்
புன்னக்காயல் கடற்கரையில் பைபர் மீன்பிடி படகு, வலைகள் தீயில் கருகி சேதம் அடைந்தது
தூத்துக்குடி
ஆறுமுகநேரி:
புன்னக்காயல் தெற்கு தெருவில் வசித்து வருபவர் ராஜ் மகன் ராஜா போஸ் (வயது 46). மீனவர். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார் .இவருக்கு சொந்தமான பைபர் படகு உள்ளது. நேற்று முன்தினம் வழக்கம் போல கடலில் மீன் பிடித்து விட்டு சேர்ந்தபூமங்கலம் காலனி குடியிருப்பு அருகே உள்ள கடற்கரையில் படகு, வலைகளையும் வைத்துவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். அன்று நள்ளிரவில் அவரது படகு தீப்பிடித்து எரிந்தது. இதில் படகும், அதிலிருந்த வலைகளையும் தீயில் கருகி சேதமாகின. இதன் சேதமதிப்பு ரூ.50 ஆயிரம் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக ராஜா போஸ் அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து படகுக்கு தீவைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story