தாளவாடி அருகே பரிதாபம்காட்டெருமை தாக்கி மாற்றுத்திறனாளி சாவு


தாளவாடி அருகே பரிதாபம்காட்டெருமை தாக்கி மாற்றுத்திறனாளி சாவு
x

தாளவாடி அருகே காட்டெருமை தாக்கி மாற்றுத்திறனாளி இறந்தாா்.

ஈரோடு

தாளவாடி

தாளவாடி அருகே காட்டெருமை தாக்கியதில் மாற்றுத்திறனாளி பரிதாபமாக இறந்தார்.

மாற்றுத்திறனாளி

தாளவாடியை அடுத்த முதியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ் (வயது 48). மாற்றுத்திறனாளி. இவர் முதியனூரில் இருந்து தாளவாடிக்கு 3 சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். முதியனூர் வனப்பகுதி சாலை வழியாக சென்று கொண்டிருந்தபோது, வனப்பகுதியில் இருந்து ஏராளமான காட்டெருமைகள் வெளியேறின. அப்போது அந்த காட்ெடருமைகள் முதியனூர் வனச்சாலையை கடந்து சென்றன. இதில் ஒரு காட்டெருமை திடீரென மூன்று சக்கர வாகனத்தில் சென்ற ராஜை துரத்தி தாக்கி உள்ளது.

சாவு

இதில் அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதை கண்டதும் அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த ராஜை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தாளவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story