தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் வரவேற்பு


தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம்   தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் வரவேற்பு
x
தினத்தந்தி 29 Jun 2022 7:19 PM IST (Updated: 29 Jun 2022 7:20 PM IST)
t-max-icont-min-icon

தொழில்கல்வி பயின்ற மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் வழங்கப்படும் என அரசு அறிவித்ததை தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் வரவேற்றுள்ளது.

வேலூர்

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக வேலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் காட்பாடியில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் என்.ரவி, வேலூர் மாவட்ட செயலாளர் க.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் எஸ்.ரமேஷ் வரவேற்றார்.

கூட்டத்தில், தமிழக என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கையில் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள 17 கல்லூரிகளில் இடம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாக எடுத்து பயிலும் மாணவர்களுக்கு வசூலிக்கும் தனிக்கட்டணத்தை அரசு ரத்து செய்து உள்ளது. இதனை தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் வரவேற்கிறது.

மெல்ல கற்கும் மாணவர்களின் நலன் கருதி வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்கல்வி பாடத்தை கட்டாய பாடமாக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ஜெயபிரகாஷ், நாகலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story