முகம்மது சதக் என்ஜினீயரிங் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்


முகம்மது சதக் என்ஜினீயரிங் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
x
தினத்தந்தி 10 March 2023 12:15 AM IST (Updated: 10 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கீழக்கரை முகம்மது சதக் என்ஜினீயரிங் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் 2 நாட்கள் நடக்கிறது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சதக்கல்வி குழுமங்கள் மற்றும் நடிகர் விஐய் சேதுபதியின் வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம் ஆகியவற்றின் சார்பில் கீழக்கரை முகம்மது சதக் என்ஜினீயரிங் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. நாளை (11-ந்தேதி) மற்றும் 12-ந்தேதிகளில் நடைபெற உள்ள இந்த முகாமில் தலைசிறந்த 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் தங்களின் பணியாளர் தேவைக்காக சுமார் 15 ஆயிரம் பேரை தேர்வு செய்ய உள்ளன. 10-ம் வகுப்பு முதல், ஐ.டி.ஐ., டிப்ளமோ, டிகிரி, பொறியியல் மற்றும் மேலாண்மைதுறை, எம்.பி.ஏ, கணினி அறிவியல், மருத்துவம் சார்ந்த இதர படிப்புகள் படித்த அனைவரும் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தங்களின் எதிர்கால வாழ்விற்கான சிறந்த வேலைவாய்ப்பினை பெற்று பயன்அடையலாம். இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள http://jobfair.vvvsi.com என்ற இணைப்பில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு இலவசம் என்பதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டு பயனடையலாம். என்று முகமது சதக் கல்வி குழுமங்களின் தலைவர் முகமது யூசுப் சாஹிப், இயக்குனர் ஹாமீது இப்ராகிம் ஆகியோர் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story