தூத்துக்குடியில் திங்கட்கிழமை மின்தடை செய்யப்படும் இடங்கள்


தூத்துக்குடியில் திங்கட்கிழமை மின்தடை செய்யப்படும் இடங்கள்
x

தூத்துக்குடியில் திங்கட்கிழமை மின்தடை செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி

தூத்துக்குடி மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயற்பொறியாளர் ராம்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி நகர் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, விபத்து ஏற்படாமல் இருக்கவும், உயர் மின் அழுத்த பாதைகளில் பழுதுகள் சீரமைத்தல். சாய்ந்த நிலையிலுள்ள மின்கம்பங்களை சரி செய்தல், மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பணிகள் இன்று(திங்கட்கிழமை) மேற்கொள்ளப்படுகிறது. எனவே, தூத்துக்குடி உபகோட்டத்திற்கு உட்பட்ட பாத்திமா நகர், இந்திரா நகர். கோமதி பாய் காலனி, ஜார்ஜ் ரோடு, தெற்கு எம்பரர் தெரு, அய்யனார் புரம், பாலார் பட்டி, தருவைகுளம் மற்றும் பட்டின மருதூர். உப்பள பகுதிகள். முத்து கிருஷ்ணாபுரம் மற்றும் கருப்பட்டி சொசைட்டி சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அதுபோல் பிரையன்ட் நகர், மீனாட்சிபுரம், டூவிபுரம், மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மேலும் சிப்காட் உபமின் நிலையத்திற்கு உட்பட்ட மடத்தூர், மடத்தூர் பைபாஸ் ரோடு பகுதிகளிலும், முத்தையாபுரம் தானியங்கி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ராஜீவ் நகர், மகாலட்சுமி நகர், நேருஜி நகர், சாமிநகர், பாலாஜி நகர், தேவி நகர், காந்திநகர், திருச்செந்தூர் மெயின் ரோடு கேம் -1, கேம் -2, என்.டி.பி.எல், சி.எஸ்.எப். குடியிருப்பு, சுனாமி காலனி மற்றும் அதை சுற்றில் பகுதிகளிலும்,

சன்னது புதுக்குடி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கிழக்கோட்டை, கோவிந்தாபுரம், கொடியங்குளம். சைமாசபுரம், புதூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும்,

ஓட்டப்பிடாரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பாஞ்சாலங்குறிச்சி, சிலோன் காலனி, இந்திரா நகர், கவர்னகிரி மற்றம் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் வாகைகுளம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட அல்லிகுளம், திருவனந்தபுரம், தெற்கு சிலுக்கன்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story