தூத்துக்குடியில் வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்
தூத்துக்குடியில் வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை மின் விநியோகப் பிரிவுக்கு உட்பட்ட குலையன்கரிசல், போடம்மாள்புரம், திருமலையாபுரம், பேய்குளம் ஆகிய பகுதிகளிலும், வல்லநாடு மின் விநியோகப் பிரிவுக்கு உட்பட்ட எல்லை நாயக்கன்பட்டி, ராமநாதபுரம், பத்மநாபமங்கலம் குவாரி ஆகிய பகுதிகளிலும், குளத்தூர் மின் விநியோகப் பிரிவுக்கு உட்பட்ட வைப்பார் உப்பளம் பகுதியிலும், சாயர்புரம் மின் விநியோகப் பிரிவுக்க உட்பட்ட இருவப்பபுரம், சோலை புதூர் ஆகிய பகுதிகளிலும், பழையகாயல் மின் விநியோகப் பிரிவுக்கு உட்பட்ட கோவங்காடு உப்பளம் பகுதிகளிலும் நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை பழுதடைந்த மின்கம்பம் மற்றும் தொய்வான மின்பாதையை சரி செய்யும் பணி நடக்கிறது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
இந்த தகவலை தூத்துக்குடி ஊரக மின்சார வாரிய செயற்பொறியாளர் பத்மா தெரிவித்து உள்ளார்.