திருச்செந்தூர் கோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்


திருச்செந்தூர் கோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்
x

திருச்செந்தூர் கோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் மின் விநியோக செயற் பொறியாளர்‌ விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செந்தூர், ஆறுமுகநேரி, சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி பகுதிகளில் சீரான மின்விநியோகம் வழங்கும் பொருட்டு முன்னேற்பாடாக சேதமடைந்த மின்கம்பங்கள் மின்பாதைகளில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மரக்கிளைகளை அகற்றுதல், சேதமடைந்துள்ள இழுவை கம்பிகளை சீரமைத்தல், தொய்வாக உள்ள மின்பாதைகள் சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. எனவே, ஆலந்தலை, கல்லாமொழி, சண்முகபுரம், வெள்ளாளன்விளை, தண்டுபத்து, ரத்தினபுரி, எல்.எஸ்.ரோடு, மேலபள்ளிதெரு, கீரனூர், தலைவன்வடலி, நாலுமாவடி, காளிநகர், கட்டையன்விளை, காமராஜ் நகர் (சாத்தான்குளம்), சுப்பராயர்புரம், பள்ளிவாசல்பத்து, கட்டாரிமங்கலம், பாலசுப்பிரமணியபுரம், வரதராஜபுரம், கட்டையன்புதூர், இலங்கநாதபுரம், அனைத்தலை, அடைக்கலாபுரம் (மெஞ்ஞானபுரம்), குலசைரோடு, திசையன்விளை ரோடு, படுக்கப்பத்து, தட்டார்மடம் ஆகிய பகுதிகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story