செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்


செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்
x

ஸ்ரீமூலக்கரை, வாகைகுளம்,குளத்தூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

ஸ்ரீமூலக்கரை, வாகைகுளம்,குளத்தூர் பகுதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இது குறித்து தூத்துக்குடி ஊரக மின்சார வாரிய செயற்பொறியாளர் பத்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மின்கம்பம் மாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமூலக்கரை, வாகைகுளம், குளத்தூர், மஞ்சள்நீர்க்காயல், வாகைகுளம் ஆகிய துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் உயர்அழுத்த மின்பாதையில் உள்ள பழுதடைந்த மின்கம்பம் மாற்றும் பணி, தொய்வான மின்பாதையை சரி செய்யும் பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.

இதனால் ஸ்ரீமூலக்கரை துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் பண்டாரவிளை பீடரில் உள்ள, சிவகளை, நயினார்புரம், மாங்கொட்டாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும், வாகைகுளம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் வல்லநாடு பீடரில் உள்ள எல்லைநாயக்கன்பட்டி, ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும், குளத்தூர் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் வேப்பலோடை பீடரில் உள்ள எஸ்.வி.புரம், கல்லூரணி, கீழவைப்பார், சிப்பிகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார உப்பள பகுதிகளிலும் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.

வாகைகுளம்

இதே போன்று மஞ்சள்நீர்க்காயல் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் முக்காணி பீடரில் உள்ள முக்காணி, பழையகாயல் அதன் அருகில் உள்ள பகுதிகளிலும், வாகைகுளம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் மில் பீடரில் உள்ள நடுகூட்டுடன்காடு, கீழகூட்டுடன்காடு, அய்யனார் காலனி, அய்யப்பன் நகர், ராமநாச்சியார்புரம், கயிலாசபுரம், சண்முகபுரம், சுப்பிரமணியபுரம், சீனிநகர், கணபதி நகர், பியூலா நகர் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளிலும் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story