நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x
தினத்தந்தி 6 Sept 2023 1:00 AM IST (Updated: 6 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:-

போச்சம்பள்ளி மின்வாரிய செயற்பொறியாளர் இந்திரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

போச்சம்பள்ளி கோட்டத்துக்கு உட்பட்ட ஊத்தங்கரை துணைமின் நிலையம் மற்றும் குன்னத்தூர் துணைமின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்ப நாயக்கனூர், கல்லூர், மோட்டுப்பட்டி, கொம்மம்பட்டு, உப்பாரப்பட்டி, சாமல்பட்டி, காரப்பட்டு, கீழ்குப்பம், மூங்கிலேரி, பெருமாள் குப்பம், வெங்கடதாம்பட்டி, மிட்டப்பள்ளி, மாரம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதேபோல் குன்னத்தூர் மின் நிலையத்திற்கு உட்பட்ட காரப்பட்டு கதவணி, தகரப்பட்டி, உப்பாரப்பட்டி, ஊமையனூர், சாமல்பட்டி பசந்தி, கணிச்சி, அத்திவீரம்பட்டி, குமாரம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.


Next Story