தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் பகுதியில்சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்
தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் பகுதியில்சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இது குறித்து தூத்துக்குடி நகர்ப்புற மின்சாரவாரிய செயற்பொறியாளர் ராம்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மின்தடை
தூத்துக்குடிநகர், அரசடி, ஓட்டப்பிடாரம், ஒட்டநத்தம் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதனால் தூத்துக்குடி போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1-ம் கேட், 2-ம் கேட், மட்டக்கடை, வடக்கு பீச் ரோடு, ரெயில்நிலைய ரோடு, எட்டயபுரம் ரோடு, தெப்பக்குளம் தெரு, சிவன்கோவில் தெரு, வ.உ.சி. ரோடு, ஜெயிலானி தெரு, வடக்கு காட்டன் ரோடு, மீனாட்சிபுரம், வி.இ.ரோடு, பாத்திமாநகர், தாமஸ் நகர், தெற்கு புதுத் தெரு, தெற்கு காட்டன் ரோடு, ஆண்டாள் தெரு, செல்வீஜர் தெரு, டி.ஆர்.நாயுடு தெரு, லயன்ஸ்டவுன், பனிமய நகர், டபிள்யூ.ஜி.சி. ரோடு, காந்திநகர், பங்களா தெரு, பாலவிநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, தாமோதரநகர், சண்முகபுரம், ஸ்டேட் வங்கி காலனி, கந்தசாமிபுரம், இன்னாசியார்புரம், எழில்நகர், அழகேசபுரம், திரவியபுரம், முத்துகிருஷ்ணாபுரம், குறிஞ்சிநகர், அண்ணாநகர், வி.வி.டி.மெயின் ரோடு, முனியசாமி புரம், மத்திய அரசு ஊழியர் குடியிருப்பு, லெவிஞ்சிபுரம், பக்கிள்புரம், லோகியாநகர், போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட்நகர், முத்தம்மாள் காலனி, கே.டி.சி.நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும்,
ஓட்டப்பிடாரம்
மேலஅரசடி, கீழஅரசடி, சமத்துவபுரம், தருவைகுளம், பட்டினமருதூர், தருவைகுளம் மற்றும் பட்டினமருதூர் உப்பளம் சார்ந்த பகுதிகள், கிழக்கு கடற்கரை சாலை, வாலசமுத்திரம், புதூர்பாண்டியாபுரம், சில்லாநத்தம், வேலாயுதபுரம், சாமிநத்தம் மற்றும் எட்டயபுரம் ரோடு பகுதிகளிலும்,
ஓட்டப்பிடாரம், ஓசநூத்து, ஆரைக்குளம், குலசேகரநல்லூர், பாஞ்சாலங்குறிச்சி, வெள்ளாரம், க.சுப்பிரமணியபுரம், குறுக்குச்சாலை, புதியம்புத்தூர், சில்லாநத்தம், சாமிநத்தம், கொம்பாடி தளவாய்புரம், தெற்கு வீரபாண்டியபுரம், ஆவாரங்காடு, அகிலாண்டபுரம், முப்பிலிவெட்டி, பரும்பூர், வேடநத்தம், கே.குமாரபுரம் ஆகிய பகுதிகளிலும்,
சொக்கநாதபுரம், வாஞ்சி மணியாச்சி சந்திப்பு, மணியாச்சி, வடமலாபுரம், பாறைக்குட்டம், மேலப்பாண்டியாபுரம், சண்முகபுரம், மேலப்பூவானி, கீழப்பூவானி, அக்கநாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், ஒட்டநத்தம், மலைப்பட்டி, கல்லத்திகிணறு, முறம்பன், சங்கம்பட்டி, சுந்தரராஜபுரம், பரிவில்லிக் கோட்டை, அயிரவன்பட்டி, கோபாலபுரம், கூட்டுப்பண்ணை கோபாலபுரம், கொத்தாளி, தென்னம்பட்டி, கோவிந்தாபுரம், கொல்லங்கிணறு, மருதன்வாழ்வு, டி.அய்யப்பபுரம், வேப்பங்குளம், கலப்பபட்டி, கீழக்கோட்டை காலனி ஆகிய பகுதிகளிலும் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.