தூத்துக்குடியில் புதன்கிழமை இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
தூத்துக்குடியில் புதன்கிழமை இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி
தூத்துக்குடி ஊரக மின்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பழுதடைந்த மின்கம்பங்களை சரி செய்தல், தொய்வான மின்பாதையை சீரமைத்தல் போன்ற பணிகள் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதனால் புதுக்கோட்டை அருகே உள்ள தட்டப்பாறை மெயின் ரோடு, நாச்சியார்புரம், வல்லநாடு அருகே உள்ள கலியாவூர், சின்ன கலியாவூர், காளாங்கரை, அம்பேத்கார் நகர், உழக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், குளத்தூர் அருகே மார்த்தாண்டம்பட்டி, வள்ளிநாயகிபுரம், அயன்செங்கல்படை, சாயர்புரம் அருகே சிவத்தையாபுரம், நடுவக்குறிச்சி ஆகிய பகுதிகளிலும் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இந்த தகவலை ஊரக மின்சார வாரிய செயற்பொறியாளர் பத்மா தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story