நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
சேலம், ஓமலூரில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்ப்டடு உள்ளன.
சேலம் கிச்சிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, சேலம் தாதுபாய்குட்டை, கடை வீதி, பழைய பஸ் நிலையம், கோட்டை, கலெக்டர் அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி, செவ்வாய் பேட்டை, முதல் அக்ரஹாரம், மேட்டுத்தெரு, செரிரோடு, பிரட்ஸ் ரோடு, மரக்கடை வீதி, கருங்கல்பட்டி, களரம்பட்டி, பில்லுக்கடை, குகை, எருமாபாளையம், சீலநாயக்கன்பட்டி, தாசநாயக்கன்பட்டி, தாதகாப்பட்டி, கிச்சிப்பாளையம், சன்னியாசிகுண்டு, நாராயண நகர், பொன்னம்மாபேட்டை, பட்டை கோவில், டவுன் ரெயில் நிலையம், 4 ரோடு, லைன்மேடு, வள்ளுவர் நகர், அன்னதானப்பட்டி, திருச்சி ேராடு, சங்ககிரி ரோடு ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இந்த தகவலை சேலம் நகர மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தும்பிப்பாடி துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்வினியோகம் இருக்காது. ஓமலூர், சிக்கனம்பட்டி, தொட்டம்பட்டி, தும்பிப்பாடி, தின்னப்பட்டி, பண்ணப்பட்டி, பூசாரிப்பட்டி, காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை, கொங்குப்பட்டி, செம்மாண்டம்பட்டி, சிந்தாமணியூர், பஞ்சுகாளிப்பட்டி, தாராபுரம், சின்னதிருப்பதி, காருவள்ளி, பெரியப்பட்டி, மரக்கோட்டை, கொட்டாலூர் புதூர், கஞ்சநாயக்கன்பட்டி, கோட்டாங்கல்லூர், பெரிய சாத்தப்பாடி, சின்ன சாத்தப்பாடி, அரங்கனூர், ஓலைப்பட்டி, கட்டபெரியாம்பட்டி, ஊமாரமங்கலம், பச்சனம்பட்டி, கருப்பனம்பட்டி, பல்பாக்கி, புக்கம்பட்டி. இந்த தகவலை ஓமலூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் சங்கரசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.