குந்தா அணையில் கூடுதலாக 60 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டம்-அதிகாரிகள் தகவல்


குந்தா அணையில் கூடுதலாக 60 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டம்-அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குந்தா அணையில் கூடுதலாக 60 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீலகிரி

ஊட்டி

குந்தா அணையில் கூடுதலாக 60 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குந்தா அணை

தமிழகத்தின் தண்ணீர் தொட்டி என்று நீலகிரி மாவட்டம் அழைக்கப்படுகிறது. சமவெளியில் பாயும் நதிகளின் நீர்பிடிப்பு பகுதியாகவும் விளங்குகிறது. இங்கு உற்பத்தியாகும் மாயார், பவானி ஆகிய இரு ஆறுகளும் கோவை, ஈரோடு மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவையை பூர்த்தி செய்து, காவிரியுடன் கலந்து டெல்டா மாவட்டங்களை சென்றடைகின்றன.

இதேபோல் 60 சதவீதத்திற்கும் அதிகமாக வனப்பகுதி இருப்பதால் ஆண்டில் சுமார் 94 நாட்கள் மழை பெய்து வருகிறது. அதாவது மாவட்டத்தில் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழைகள் மூலம் ஆண்டிற்கு சுமார் 1250 மில்லி மீட்டர் மழை பொழிகிறது.

இதேபோல் மலை மாவட்டம் என்பதால் குந்தா, பைக்காரா புனல் நீர்மின் திட்டத்தின் கீழ் உள்ள 12 மின் நிலையங்கள் மூலமாக 833.65 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

70 மெகாவாட்

இதில், நீலகிரி மாவட்டத்துக்கு 70 மெகாவாட் பயன்படுகிறது. மீதமுள்ள மின்சாரம், ஈரோடு கிரீட்டுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து தமிழகம் முழுவதும் வினியோகிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் சராசரி மழை அளவு வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு 40 சதவீதம் கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. இதனால் குந்தா அணையில் கூடுதல் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளதாக மின்வாரியத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

60 மெகாவாட்

நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை அனைத்து அணைகளும் ஒன்றோடு ஒன்று ஒன்றிணைந்துள்ளதால், மாவட்டத்தில் சேகரமாகும் நீர் விரயமாகாமல் மின் உற்பத்திக்கு பயன்படுகிறது. இதன் மூலம் குந்தா திட்டத்தின் கீழ் அவலாஞ்சி, பார்சன்ஸ் வேலி குந்தா, கெத்தை, பரளி, பில்லூர் மூலம் 585 மெகா வாட்டும், பைக்காரா திட்டத்தின் கீழ் முக்குருத்தி, சிங்காரா, மரவகண்டி, மாயார் மூலம் 248 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில் குந்தா அணையில் 60 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது குந்தா அணையில் 2 பவர் ஹவுஸ் கூடுதலாக நிறுவப்பட்டு அதன் மூலம் தலா 30 மெகாவாட் கூடுதலாக மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக சில்லஹல்லா ஆறு மூலம் அவலாஞ்சி மற்றும் அவலாஞ்சியில் இருந்து குந்தா அணைக்கு கூடுதல் தண்ணீர் கொண்டு வந்தால் சாத்தியமாகும். திட்டம் குறித்து உயர்அதிகாரிகளுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

கூடுதலாக 60 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டால் எதிர்கால மின்சார தேவைக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story