26 மெட்ரோ ரெயில்களை டிரைவர் இல்லாமல் இயக்க திட்டம்


26 மெட்ரோ ரெயில்களை டிரைவர் இல்லாமல் இயக்க திட்டம்
x

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டமாக 26 மெட்ரோ ரெயில்களை டிரைவர் இல்லாமல் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

சென்னை

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டமாக 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த வழித்தடங்களில் வருகிற 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த வழித்தடங்களில் டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ ரெயில்களை (78 பெட்டிகள்) தயாரிப்பதற்காக 'அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட்' இந்தியா நிறுவனத்துக்கு ரூ.946 கோடியே 92 லட்சம் மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான நிதியை தமிழக அரசு வழங்குகிறது.

ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதல் டிரைவர் இல்லா மெட்ரோ ரெயில் 2024-ம் ஆண்டு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.

மேற்கூறிய தகவல்களை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story