வாரச்சந்தையை விரைவில் திறக்க ஏற்பாடு
உடன்குடியில் வாரச்சந்தையை விரைவில் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக பேரூராட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
உடன்குடி:
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் உடன்குடி வாரச்சந்தையில் ரூ1.98 கோடியில் கடைகள் கட்டும் பணி தீவிரமாக நடக்கிறது. இப்பணியை உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி மன்ற தலைவிஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், அமைச்சர் ஏற்பாட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வாரச்சந்தை கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணியை விரைவில் முடித்து திறப்பு விழா நடத்த வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இப்பணியை விரைவில் முடித்து வாரச்சந்தையை திறக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம், என்றார். ஆய்வின் போது அவருடன் கவுன்சிலர்கள் முகம்மது ஆபித், சரஸ்வதி பங்காளர், பிரதீப் கண்ணன், ராஜேந்திரன், முத்துசந்திராசிவா, அன்பு ராணி, சரஸ்வதி மற்றும் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆயிஷா கல்லாசி மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் உடன் சென்றனர்.