ரோஜா பூங்காவில் செடிகளுக்கு கவாத்து செய்யும் பணி தொடக்கம்


ரோஜா பூங்காவில் செடிகளுக்கு கவாத்து செய்யும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 21 Feb 2023 12:30 AM IST (Updated: 21 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் ேராஜா பூங்காவில் செடிகளுக்கு கவாத்து செய்யும் பணி நேற்று ெதாடங்கியது.

திண்டுக்கல்

ரோஜா தோட்டம்

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் உள்ள அப்சர்வேட்டரி பகுதியில் இந்தியாவிலேயே பெரிய ரோஜா தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

இந்த பூங்காவில் கடந்த 2018-ம் ஆண்டு சுமார் 16 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டது. இதில் சுமார் 1,500 வகையான பல வண்ண ரோஜாக்கள் ஆண்டு தோறும் பூத்துக் குலுங்கி வருகின்றன.

கவாத்து செய்யும் பணி

இதற்காக இந்த ஆண்டு ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணி நேற்று தொடங்கியது. இதனை தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் சைனி, தோட்டக்கலை அலுவலர் பார்த்தசாரதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ரோஜா செடிகளில் பூக்கள் பூப்பதற்கு ஏற்ற வகையில் கவாத்து செய்யும் பணி 20 நாட்களுக்கு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் 2-வது வாரம் முதல் ரோஜா பூக்கள் பூக்க தொடங்கி விடும். மே மாதத்தில் பூங்கா முழுவதும் ரோஜாக்கள் பூத்துக் குலுங்கும். இந்த ஆண்டு அனைத்து செடிகளிலும் சேர்த்து ஒரு கோடி பூக்கள் பூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நேற்று வரை ரோஜா பூங்காவை சுமார் 4 லட்சத்து, 30 ஆயிரம் பேர் பார்வையிட்டு உள்ளனர். இந்த ஆண்டு இதன் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றனர்.


Related Tags :
Next Story