தோட்ட தொழிலதிபர்கள் சங்க மாநாடு


தோட்ட தொழிலதிபர்கள் சங்க மாநாடு
x
தினத்தந்தி 20 Sept 2022 12:15 AM IST (Updated: 20 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் தோட்ட தொழிலதிபர்கள் சங்க மாநாடு ெதாடங்கியது.

நீலகிரி

குன்னூர்,

உபாசி என்று அழைக்கப்படும் தென்னிந்திய தோட்ட தொழிலதிபர்கள் சங்கம் குன்னூரில் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் தென்னிந்தியாவில் தோட்ட தொழில்களான தேயிலை, காபி, ரப்பர், வாசனை திரவியங்கள் போன்றவற்றை விளைவிக்கும் தோட்ட அதிபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தநிலையில் உபாசியின் 129-வது மாநாடு குன்னூரில் நேற்று தொடங்கியது. முதல் நாள் மாநாட்டில் தேயிலை, காபி, ரப்பர் போன்ற வாரியங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மாநாட்டை முன்னிட்டு விவசாயம் சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் நவீன காலங்களில் பயன்படுத்தக்கூடிய தேயிலை பறிக்கும் புதிய கருவிகள், பல்வேறு புதிய எந்திரங்கள் இடம் பெற்றிருந்தன. இதுமட்டுமின்றி தேயிலை வாரியம் சார்பில், தேயிலைத்தூள் வகைகளும் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் இயற்கை முறையில் தேயிலை உள்பட அனைத்து விவசாயத்துக்கும் பயன்தர கூடிய இயற்கை உரங்கள் வைக்கப்பட்டு இருந்தது. இதனை விவசாயிகள், தொழிலதிபர்கள் பார்வையிட்டனர். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் நிறைவு விழாவில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு பேசுகிறார்.


Next Story