தாமிரபரணி ஆற்றங்கரையில் மரக்கன்றுகள் நடும் பணி


தாமிரபரணி ஆற்றங்கரையில் மரக்கன்றுகள் நடும் பணி
x

கோபாலசமுத்திரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

கோபாலசமுத்திரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.

மரக்கன்று நடும் பணி

நெல்லை அருகே உள்ள கோபாலசமுத்திரம் கிராமத்தில் சர்வதேச ஈர நிலங்கள் தினத்தையொட்டி தாமிரபரணி ஆற்றங்கரை பகுதியை சோலை வனமாக்கிட மரக்கன்றுகள் நடும் பணி நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நடவு செய்து பணியை தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நெல்லை மாவட்டத்தை பசுமை நிறைந்த மாவட்டமாக மாற்ற முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தாமிரபரணி ஆற்றங்கரையை மரங்கள் நிறைந்த கரையாக மாற்றுவதற்கு கோபாலசமுத்திரம் பகுதியில் நெல்லை நீர்வளம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் மூலம் மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகிறது'' என்றார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வன், சேரன்மாதேவி தாசில்தார் பாலசுப்பிரமணியன், கோபாலசமுத்திரம் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், ஏட்ரீ அமைப்பு மதிவாணன், எக் பவுண்டேசன் நிறுவனர் விவேக், சபரி, பேராசிரியர் விசுவநாதன், நம் தாமிரபரணி அமைப்பு நல்ல பெருமாள், ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story