குன்னூரில் தோட்ட தொழிலாளர்கள் சங்க கூட்டம்


குன்னூரில் தோட்ட தொழிலாளர்கள் சங்க கூட்டம்
x

குன்னூரில் தோட்ட தொழிலாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.

நீலகிரி

கோத்தகிரி

நீலகிரி மாவட்ட தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் (ஐ.என்.டி.யு.சி) நிர்வாக குழு கூட்டம் குன்னூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமது தலைமை வகித்தார். செயல் தலைவர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தார். பொது செயலாளர் ராமலிங்கம் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் குன்னூர் மவுண்ட் பிளசன்ட்டில் உள்ள நல்லுறவு மனையில் மழையினால் சேதம் அடைந்த தடுப்புச் சுவரை சீரமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் தொழிலாளர்களின் நலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காணும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேயிலைத் தோட்ட நிர்வாக இயக்குனர்களை சந்தித்து, தொழிலாளர்களுக்கு நலன்களைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து கடந்த மே மாதம் நடைபெற்ற மகாசபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி சங்கத்தின் தலைவராக முகமது, செயல் தலைவராக பாலசுந்தரம், பொது செயலாளர்களாக ராஜ கோபால், ராமலிங்கம் ஆகியோரும், துணைத் தலைவர்களாக கூடலூர் மற்றும் கோத்தகிரியைச் சேர்ந்த வின்சென்ட், பாலன், சின்னதம்பி, உசைனார், அசீர், உஸ்மான், சுகுந்தன், இணைச் செயலாளர்களாக ராமர், ஜெயந்தி ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர். கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்துக் கொண்டனர். முடிவில் பொருளாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.


Next Story