10 ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் பணி
10 ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் பணி
தஞ்சாவூர்
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக வளாகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், தமிழர்களின் பாரம்பரிய மரங்களில் ஒன்றான பனை மரங்களை அதிகஅளவில் வளர்க்க வேண்டும் என்பதற்காகவும் 10 ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் பணி தொடக்கவிழா நேற்றுகாலை நடந்தது. இதற்கு தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது, தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் 824 ஏக்கர் இடம் உள்ளது. இதில் பல வகையான மரங்கள் இருந்தாலும், பனை மரங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதை அதிகப்படுத்துவதற்காக 10 ஆயிரம் பனை விதைகளை விதைக்கிறோம். தற்போது மழை பெய்து வரும் நிலையில், பனை விதைகள் மண்ணில் புதைந்து வளருவதற்கு வாய்ப்பாக அமையும் என்றார். விழாவில் கிரீன் நீடா சுற்றுச்சூழல் இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜவேல், தமிழ்ப்பல்கலைக்கழக சுவடிப் புல முதன்மையர் கண்ணன், ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.