ஊட்டி கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு
ஊட்டி கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு
நீலகிரி
ஊட்டி
உலக சுற்றுச்சூழல் தினத்தையொடடி ஊட்டியை அடுத்த காக்கா தோப்பு பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதற்கு மாவட்ட நீதிபதி முருகன் தலைமை தாங்கினார்.
இதில் மக்கள் நீதிமன்ற தலைவர் ஸ்ரீதரன், சார்பு நீதிபதி ஸ்ரீதர், குற்றவியல் நீதிபதி தமிழினியன், உரிமையியல் கோர்ட்டு நீதிபதி மோகனகிருஷ்ணன், வனச்சரகர் ரமேஷ், வானவர்கள் ஜாவித், நவரத்தினம், யோகேஸ்வரன், மற்றும் நீதிபதிகளின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட பல வகையான மரக்கன்றுகள் நடப்பட்டு தண்ணீர் பாய்ச்சப்பட்டது. மேலும் இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் தினத்தன்று மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story