தீ வைத்து எரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்
தீ வைத்து எரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்
திருப்பூர்
தளி,
உடுமலை பகுதியில் சாலையின் ஓரங்களில் அதிகாலை மற்றும் மாலை நேரத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகிறது. அதில் இருந்து வீசக்கூடிய துர்நாற்றம், புகை காற்று மாசு சுற்றுப்புற சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.இதனால் நடைபயிற்சி செல்பவர்கள், மாணவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அத்துடன் அருகில் உள்ள வீடுகளில் வசித்து வருகின்ற பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. எனவே உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை தீ வைத்து எரிப்பதற்கு முற்றிலுமாக தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story