கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்


கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 21 Jan 2023 12:15 AM IST (Updated: 21 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை

கெலமங்கலம் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் நாகேந்திரகுமார் மற்றும் அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கடைகளில் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story