பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

சத்திரப்பட்டி அருகே பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திண்டுக்கல்

சத்திரப்பட்டி அருகே உள்ள தா.புதுக்கோட்டை ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் கலந்துகொண்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் தா.புதுக்கோட்டை ஊராட்சி தலைவர் ஜெயராணி, துணைத்தலைவர் சேகர், ஒன்றியக்குழு கவுன்சிலர் ரேவதி சேகர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணன், ஊராட்சி செயலர் செல்லமுத்து, வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story