பிளாஸ்டிக் இல்லா பேரூராட்சி விழிப்புணர்வு ஊர்வலம்
திட்டச்சேரியில் பிளாஸ்டிக் இல்லா பேரூராட்சி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
திட்டச்சேரி:
தூய்மைக்கான மக்கள் இயக்கம், பிளாஸ்டிக் இல்லா பேரூராட்சி விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் முகாம் திட்டச்சேரியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திக்கா தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் முன்னிலை வகித்தார்.மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் கலந்துகொண்டு கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு மஞ்சப்பை, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.திட்டச்சேரி பேரூராட்சி வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் திட்டச்சேரி கடைத்தெரு, கொந்தகை கடைத்தெரு ஆகிய வழியாக சென்று மீண்டும் திட்டச்சேரி பேரூராட்சி வளாகத்தில் முடிவடைந்தது. இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், பேரூராட்சி மன்ற உறுப்பினர் முகமது சுல்தான்.வரித்தண்டலர் ஜெகவீரபாண்டியன் மற்றும் அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.