பிளாஸ்டிக் மாசில்லா விழிப்புணர்வு ஊர்வலம்
நாகூர் தர்கா அலங்கார வாசலில் பிளாஸ்டிக் மாசில்லா விழிப்புணர்வு ஊர்வலம்
நாகப்பட்டினம்
நாகூர்:
நாகையை அடுத்த நாகூர் தர்கா அலங்கார வாசலில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் தேசிய பசுமைப்படை சார்பில், பிளாஸ்டிக் மாசில்லா விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உறுதி மொழி வாசித்து, மஞ்சப்பை வழங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பொறியாளர் தமிழ்ஒளி, நாகூர் தர்கா அறங்காவலர் செய்யது முஹம்மது காஜி ஹுசைன் சாஹிப், நாகை நகர்மன்ற துணைத்தலைவர் செந்தில் குமார், சமூக ஆர்வலர் சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது. இதில் நாகை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் தேசிய பசுமைப்படை முத்தமிழ் ஆனந்தன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story