பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி தார்ச்சாலை


பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி தார்ச்சாலை
x

ஏனாதி ஊராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி ரூ.6 லட்சம் செலவில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது.

தஞ்சாவூர்

ஏனாதி ஊராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி ரூ.6 லட்சம் செலவில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது.

குண்டும், குழியுமான சாலை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஏனாதி ஊராட்சியில் செல்லியம்மன் கோவில் வீட்டு சாலை பகுதி குண்டும், குழியுமாக கிடந்தது.

இதனால் அப்பகுதி மக்கள் சாலையை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் தீபிகா சுதாகரிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் சாலையை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார்.

பிளாஸ்டிக் கழிவுகள்

அதன்படி ஏனாதி ஊராட்சியில் செல்லியம்மன் கோவில் வீட்டு சாலையை பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி தார்ச்சாலையாக மேம்பாடு செய்யும் பணிக்கு பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் பொது நிதியிலிருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ரூ.5 லட்சத்து 90 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து செல்லியம்மன் கோவில் வீட்டு சாலை பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி தார்ச்சாலையாக போடப்பட்டது. தற்போது அப்பகுதி மக்கள் அந்த சாலையை முழுவதுமாக பயன்படுத்தி வருகின்றனர்.


Next Story