சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள பாலீத்தின் குப்பைகள்


சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள பாலீத்தின் குப்பைகள்
x

சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள பாலீத்தின் குப்பைகள்

திருப்பூர்

காங்கயம்

காங்கயம் அடுத்துள்ள நால்ரோடு - நத்தக்காடையூர் செல்லும் இந்த பிரதான சாலையில் நால்ரோடு பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதில் சுற்று சூழலை பாதிக்கும் வகையிலான பிளாஸ்டிக் சாக்குகள், பாலிதீன் பைகள், குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் அட்டைகள் மற்றும் காய்கறி கழிவுகள் ஆகியவை கொட்டப்பட்டுள்ளது. இதனால் இங்கு துர்நாற்றம் வீசுவதோடு சுற்றுசூழல் மற்றும் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.மேலும் இப்பகுதியில் குப்பை தொட்டிகள் வைத்தாலும் மீண்டும் மீண்டும் கீழேயே குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இந்த சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து இங்கு கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதோடு, சாலையோரத்தில் இதுபோன்ற பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டாமல் தடுக்கவும், குப்பை தொட்டி ஒன்று இவ்விடத்தில் வைக்க வேண்டும் என்றும், பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story