குத்துச்சண்டை போட்டிக்கு வீரர்கள் தீர்வு


குத்துச்சண்டை போட்டிக்கு வீரர்கள் தீர்வு
x

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு வீரர்கள் தீர்வு செய்யப்பட்டனர்.

வேலூர்

சென்னையில் வருகிற 21 முதல் 23-ந் தேதி வரை மாநில அளவிலான இளைஞர் குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி வேலூர் மாவட்டம் சார்பில் குத்துச்சண்டையில் பங்கேற்கும் வீரர்களின் தேர்வு வேலூர் காகிதப்பட்டறை எம்.ஆர். குத்துச்சண்டை பயிற்சி பள்ளியில் நடந்தது.

இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 17, 18 வயது நிரம்பிய 30 வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் சிறப்பாக செயல்பட்ட 8 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு வேலூர் மாவட்ட குத்துச்சண்டை கழக மாவட்ட செயலாளர் ராஜேஷ், பயிற்சியாளர் செல்வகுமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story