அமராவதி ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையான பா தையும், படித்துறையும்அமைக்க வேண்டும்
அமராவதி ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையான பா தையும், படித்துறையும்அமைக்க வேண்டும்
மடத்துக்குளம்
மடத்துக்குளம் அமராவதி ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையான பா தையும், படித்துறையும்அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
அமராவதி ஆறு
அமராவதி ஆறு திருப்பூர் மாவட்ட எல்லையான மடத்துக்குளம் பகுதி வழியாக செல்கிறது. மடத்துக்குளம். நகரப்பகுதி மற்றும் சாமிநாதபுரம், அரசமரத்தடி, கழுகரை உள்ளிட்ட பல பகுதியில் உள்ள மக்கள் குளிக்கவும், சலவைசெய்யவும் பயன்படுத்துகின்றனர். மடத்துக்குளம் தாலுகா பகுதியில் உள்ள கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம், கே.டி.எல்.,, வேடப்பட்டி, சோழமாதேவி, சாலரப்பட்டி, உள்ளிட்ட பல கிராமங்களில்நடக்கும் கோவில் திருவிழாவிற்கு அமராவதி ஆற்றில் இருந்து தான் தீர்த்தம் எடுத்து செல்வது வழக்கம். இதுதவிர பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் அமராவதி ஆற்றில் குளித்து ஓய்வு எடுத்து செல்வார்கள்.
விநாயகர் சதுர்த்தி விழாவின் போது சுற்று ப்பகுதியில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மற்றும் நகர பகுதிகளில் அமைக்கப்படும் சிலைகள் இந்த ஆற்றில்தான் கரைக்கப்படுகின்றன. போதிய பாதைகள் இல்லாததால் இந்த விழாவின் போது போக்குவரத்து நெரிசல், சிலை கரைப்பதில் சிரமம், தள்ளு முள்ளு ஆண்டு தோறும் ஏற்படுகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி நடக்கும் இந்த இடத்தில் ஆற்றங்கரைக்கு செல்ல முறையான பாதை எதுவும் இல்லை. தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் இருபுறங்களிலும் முட்புதர்களுக்கு இடையில் சிறிய மண்பாதை உள்ளது. ஒற்றையடி பாதையான இதில் குறிப்பிட்ட தொலைவிற்கு மேல் வாகனங்கள் செல்ல முடியாது. இதனால் பக்தர்கள், பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
கோரிக்கை
தாலுகா தலைநகரான மடத்துக்குளத்தில் உள்ள அமராவதி ஆற்றங்கரை முக்கிய இடமாக உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு அகலமான பாதையாக இருந்துள்ளது. தற்போது, ஆக் கிரமிப்புகளால் ஒற்றையடிப் பாதையாக மாறிவிட்டது.
இது குறித்து அரசுத் துறையினர் அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆற்றங்கரைபாதையை அகலப்படுத்துவதோடு, ஆற்றங்கரையில் படித்துறை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
----
Reporter : P Ponraj Location : Tirupur - Madathukulam