நல்லிணக்க உறுதிமொழி


நல்லிணக்க உறுதிமொழி
x

நல்லிணக்க உறுதிமொழி

விருதுநகர்

அருப்புக்கோட்டை

ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்டு 20-ந் தேதி நல்லிணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டு உறுதிமொழி ஏற்கப்படுகிறது. இந்நிலையில் இந்த வருடம் ஆகஸ்டு 20-ந்தேதி சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், கோகுலாஷ்டமி விடுமுறை என்பதாலும் அரசு அலுவலகங்களில் நேற்று நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அருப்புக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் துணை தாசில்தார் பானுமதி தலைமையில் அரசு அலுவலர்கள் சாதி, இன, மத பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வு பூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என உறுதிமொழி ஏற்றனர்.


Next Story