குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி நிகழ்ச்சி


குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி நிகழ்ச்சி
x
தினத்தந்தி 15 Jun 2023 12:15 AM IST (Updated: 15 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி நிகழ்ச்சி

தஞ்சாவூர்

கும்பகோணம்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி நேற்று ஏற்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார். இந்திய அரசமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை எனவே 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன், குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் , குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன், தமிழகத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்ற என்னால் இயன்றவற்றை செய்வேன் என உறுதியளிக்கிறேன் என போக்குவரத்து கழக அதிகாரிகள், தொழிலாளர்கள், பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

இதில் பொது மேலாளர் முகமது நாசர், முதுநிலை துணை மேலாளர் கோவிந்தராஜன், முதன்மை தணிக்கை அலுவலர் சிவகுமார் மற்றும் துணை மேலாளர்கள், உதவி மேலாளர்கள், டிரைவர்கள், கண்டக்டர்கள் தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story