குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு


குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
x

மயிலாடுதுறையில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அப்போது கலெக்டர் லலிதா முன்னிலையில் அனைத்துத்துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அப்போது அவர்கள், இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால், 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன், குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்ற சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன், தமிழகத்தை குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக மாற்ற என்னால் இயன்றவரை பாடுபடுவேன் என உளமாற உறுதி கூறுகிறோம் என உறுதிமொழி ஏற்றனர். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மாவட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணன், உதவி ஆணையர் (கலால்) அர.நரேந்திரன், தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் கண்ணன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.




Next Story